163
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ட்ரினிடாட் என்ட் டுபாகோ தீவுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவோர் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்கு இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளினதும் நிதி புலனாய்வுப் பிரிவிற்கு இடையில் தொடர்புகளை பேணும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ட்ரினிடாட் என்ட் டுபாகோ தீவுகளு கியூபாவுடனும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love