குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிற்கு எதிராக வெளியாகும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில்லை என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீட் ஹர்மன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அளவுக்கதிகமாக மிகைப்படுத்துகின்றனர் எனவும் இது ஓரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் பலர் தெரிவிக்கின்றனர். எனினும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையல்ல என தெரிவித்துள்ள அவர் பல வருடங்களிற்கு முன்பே இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கவேண்டும் ஆனால் அது நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரின் இராஜினாமாவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மிகவும் துணிச்சலாக கையாண்டுள்ளார் எனவும் அவர் பாராட்டியுள்ளார். இது தொடர்பான தற்போதைய நிலையை மாற்றுவதற்கு இரு கட்சிகளும் இணைந்து செயற்படலாம் என்ற நம்பிக்கiயை பிரதமரின் நடவடிக்கைகள் அளித்துள்ளன.
கட்சிகளிற்கான விசுவாசம் காரணமாக பலர் இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தவில்லை , ஆனால் இந்த நிலை மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.