Home இலங்கைமட்டக்களப்பு, தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டுள்ளது:-

மட்டக்களப்பு, தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டுள்ளது:-

by editortamil

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில குறித்த படைமுகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு, அந்த காணிகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More