குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்க அறிக்கைக்கும் ட்ராம்ப் தரப்பிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் 13 அரசாங்க முகவர் நிறுவனங்களினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் முரண்பட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. பச்சைவீட்டு வாயு வெளியீடு தொடர்பிலான நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியிருந்தது. எனினும், மனித செயற்பாடுகளினால் காலநிலை மாற்றத்திற்கு நேரடித் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க அரசாங்க விஞ்ஞானிகளினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.