குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அக் ஷர்தாம் கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் 32 பக்தர்கள் உயிரிழந்தனர். அத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட 3 கமாண்டோ வீரர்களும் மாநில காவல்துறையினர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில் பங்கு வகித்தவராக கருதப்படும் அஜ்மீரி அப்துல் ரஷீதை அகமதாபாத் காவல்துறையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். ரியாத்தில் தலைமறைவாக இருந்த ரஷீத் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று அகமதாபாத் இந்தியா வந்துள்ள நிலையிலி; அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.