144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் மகிழங்காடு வயல் நிலங்கள் போதிய கழிவு வாய்க்கால் இன்மையால் வெள்ளத்தில் மூழ்கி அழிவடையும் நிலையில் இருப்பதாக கமக்கார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குளத்திலிருந்து வான் பாய்கின்ற போது நீர் வயல் நிலங்களுக்குச் செல்லாமல் இருப்பதற்கான அணைக்கட்டு அமைக்கப்பட்டது. இந்த அணைக்கட்டின் ஊடாக வயல் நிலங்களில் இருந்து கழிவு நீர் செல்வதற்கான வழிகள் ஏற்கனவே இருந்த இடங்களில் ஆங்காங்கே அமைக்க வேண்டும் பிரதேச கமக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை கவனத்தில் எடுக்காது சுமாா் இரண்டு கிலோமீற்றர் இடைவெளிக்கு ஒரு கழிவு நீர் செல்லும் வாய்க்கால் விடப்பட்டு அணைக்கட்டு அமைக்கப்பட்டது எனவும் பணிகள் இடம்பெறும் போது கமக்கார அமைப்புக்களால், அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய போதும் அவா்கள் அக்கறைச் செலுத்தவிலவ்லை எனத் தொிவிக்கும் கமக்காரர்கள்
தற்போது பெய்து மழை காரணமாக சுமாா் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை மூடி வெள்ள நீர் காணப்படுவதாகவும், இது வடிந்தோட முடியாது உள்ளது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இவ்வாறு நீர் காணப்படும் போது பயிர்கள் அழிவடைந்து விடும எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.
அணைக்கட்டுப் பகுதியில் கழிவு செல்லுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் போதுமானதாக இல்லாதிருப்பதோடு அமைக்கப்பட்ட கழிவு நீர் செல்லும் குழாய்களும் ஏற்கனவே இருந்த இடங்களை விடுத்து வேறுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ளது இதனால் கழிவு நீரை விரைவாக வயல் நிலங்களில் இருந்து கடத்த முடியாதிருக்கிறது. பல வருடங்கள் நெற்பயிர்ச் செய்கையில் அனுபவம் கொண்ட கமக்காரர்களின் அனுபத்தை அதிகாரிகள் ஊதாசீனம் செய்தமையின் விளைவை கமக்காரர்களே அனுப்பவிக்கின்றனா் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுதாகரனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகளை உரிய இடத்திற்கு அனுப்பி நிலைமைகளை அவதானித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
Spread the love