405
தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் திருநெல்வேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊடகவியலாளர் திருநெல்வேலி சென்றபோது, திருநெல்வேலி பொலிசார் அவரை கைதுசெய்து இழுத்துச் சென்றுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த ஊடவியலாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக முதல்வர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மற்றும் திருநெல்வேலி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் மற்றும் அண்மையில் கந்துவெட்டி கடன் தொல்லையால் இடம்பெற்ற தீக்குளிப்பு தொடர்பான கேலிச் சித்திரம் தொடர்பிலேயே இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்றில் பணிபுரிவதுடன் சில ஆங்கில ஊடகங்களிலும் கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார்.
2009இல் இடம்பெற்ற இனப்படுகொலைப் போர் தொடர்பிலும் இந்திய தமிழக அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கை அரசின் போர் நடவடிக்கை தொடர்பிலும் பிரசித்தமான கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளார்.
Spread the love