கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய சுனாமி ஒத்திகை வேலைத்திட்டம் நேற்றையதினம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் பதில் அலுவலர் சுதர்சன் தலைமையில் நடை பெற்றது
நாடளாவிய ரீதியில் 14 கரையோர மாவட்டங்களில் உள்ள 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களில் ஒலி எழுப்பட்டு மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுகின்றனர் என்பதை பரீசிலித்து பார்க்கும் குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 2.12 மணியளவில் வலைப்பாடு கிராமத்தில் நடைபெற்றது.
500க்கும் அதிகமான வலைப்பாடு கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினர் முதலுதுவிச்சேவையை வழங்கியிருந்தனர். அத்துடன் முப்படையினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது