அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் இடம்பெற்ற சிறிய மற்றும் பெரிய துப்பாக்கிச்சசூட்டு சம்பவங்களில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த புள்ளிவிபர தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம் எனும் சட்டமே மேற்படி துப்பாக்கி சூட்டினால் ஏற்படும் இழப்புகளுக்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.