185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் உள்ள இரவுவிடுதியொன்றில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார். அவோன் வீதியில் உள்ள இரவுவிடுதியில் எம்டீஎம்ஏ என்ற ஓரு வகை போதைப்பொருளை குறிப்பிட்ட இளைஞர் பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேல்ஸின் நியுபோர்ட் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு மரணித்துள்ளார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் டெல்சா என பெயர் பொறிக்கப்பட்டுள்ள மாத்திரையை பயன்படுத்தவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Spread the love