குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவின் பிராந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க உள்ளனர். தேசிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் பிராந்திய ஆளுனர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்க உள்ளனர். இது தொடர்பிலான யோசனையை ஜனாதிபதி புட்டின் பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். ஜனாதிபதிக்கு விசுவாசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்றில், இந்த யோசனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி புட்டினின் யோசனைக்கு அமைய கடந்த ஆண்டு இந்த விசேட தேசியப் பாதுகாப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி புட்டின் அண்மையில் 11 புதிய ஆளுனர்களை நியமித்திருந்தார். புட்டின், நான்காவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.