குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கீதா குமாரசிங்கவைத் தவிர்ந்த வேறும் சிலரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இரட்டைக் குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை திரட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பட்டுள்ளார்.