குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் அமுலில் உள்ள ஜனாதிபதி முறைமைக்கு நிகரான ஓர் ஜனாதிபதி முறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு கோரி தாம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் வலியுறுத்தியதனைத் தொடர்ந்து, தமக்கு கூட்டங்களில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதனை தாம் எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதனை எதிர்க்கவில்லை எனவும், அரசியல் கட்சிகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதனை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு அரசியல் சாசனம் தேவைப்படவில்லை எனவும் அது சர்வதேச சமூகத்திற்கே தேவைப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.