180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love