பிலியந்தலை பேருந்து நிலையத்தில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டு 30 பேரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீப்பளித்துள்ளது. குறித்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 42 பேர் வரை காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.