161
வியட்நாம் ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். வட கொரிய வீராங்கனை ஹ்யாங் மீ கிம்மை தோற்கடித்து சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் மேரி கோம் இறுதியாக பதக்கம் வென்றார். அதில் 51 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் வெல்லும் 6வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love