குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக செலுத்தவேண்டிய தொகை தொடர்பில் பிரித்தானியா இன்னும் ஓரு மாதத்திற்குள் இணங்கவேண்டும் என ஐரோப்பிய ஓன்றியம் எச்சரி;த்துள்ளது. பிரித்தானியா விட்டுக்கொடுப்புகள் சிலவற்றிற்கு இணங்கினாலே டிசம்பரில் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் பிரித்தானிய பிரதமர் ஆற்றிய உரைக்கு பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டன என ஐரோப்பிய ஓன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கு அதிகளவு நிதியை பிரதமர் செலுத்த முன்வராவிட்டால் டிசம்பரில் வர்த்தக பேச்சுவார்த்தைகளிற்கு ஐரோப்பிய ஓன்றியம் இணங்காது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். நிதிசார்ந்த கடப்பாடுகளில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது என இத்தாலியின் அமைச்சர் ஓருவர் தெரிவித்துள்ளார்.