குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுதந்திரப் பிரகடனம் குறித்து வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது குறித்து ஸ்பெய்ன் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஸ்பெய்னின் வெளிவிவகார அமைச்சர் அல்போன்ஸோ டஸ்டிஸ் ( Alfonso Dastis ) இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பிராந்தியங்களில் சுதந்திரப் பிரகடனம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அனுமதிப்பது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டலோனியாவில் இடம்பெற்று வரும் சர்ச்சைகளைத் தொடர்ந்து அவர் இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, கட்டலோனியாவில் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது என ஸ்பெய்ன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.