2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையானது இன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கூடவுள்ள நிலையில், இதன்போது, நிதிஅமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்படும் என தெரிவிப்பபட்டுள்ளது
அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது 2018ஆம் ஆண்டு, ஜனவரியில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவரமாக காணப்படுவதனால் சகல தரப்பினரையும் திருப்தி கொள்ளவைக்கும் வகையில், இந்த வரவு-செலவுத்திட்டத்தில் நிவாரண முன்மொழிவுகள் பெரும்பாலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.