163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் கனேடிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவர்கள் இலங்கைக் வந்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் குழுவில் பல்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சமாதான முனைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் இந்தப் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்த உள்ளனர்.
Spread the love