கடந்த பத்து வருடங்களில் இல்லாத மோசமான பஞ்சத்தை ஏமன் எதிர் கொண்டுள்ள போகிறது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஏமனின் எல்லைகள் திறக்கப்படாவிட்டால் ஏமன் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் எனவும் இதனால் கடந்த பத்து வருடங்களில் உலக நாடுகள் சந்திக்காத பெரும் பஞ்சத்தை ஏமன் சந்திக்க இருக்கிறது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் செயலாளர் மார்க் லகாக் தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏமன் நாட்டில் அரச தரப்புக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது ஏமனில் உள் நாட்டுப் போர் தீவிரத்தை அடைந்துள்ளதனைத் தொடர்ந்து சவுதி – ஏமன் கூட்டுப் படைகள் ஏமன் எல்லைகளை திங்கட்கிழமை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் உள் நாட்டுப் போர் ஆரம்பமாகிய காலம் முதல் இதுவரை 8,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.