குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய முன்னாள் சபாநாயகர் ஸ்பெய்ன் நீதிமன்றில்நேற்றைய தினம் முன்னிலையாகியுள்ளார். கட்டலோனிய சுதந்திரப் பிரகடனத்திற்கு சபாநாயகர் என்ற ரீதியில் அளித்த பங்களிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்கும் நோக்கில், ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றில் கார்மே பொர்காடெல்( Carme Forcadell ) முன்னிலையாகியுள்ளார்.
சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெய்ன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கட்டலோனியாவின் முன்னாள் சபாநாயகர் நீதிமன்றில் முன்னிலையாகிய போது, ஸ்பெய்னின் ஐக்கியத்தை ஆதரிக்கும் தரப்பினர் கூக்குரல் எழுப்பி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜனநாயக ரீதியில் தெரிவான ஓர் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்துவது எந்த வகையிலும் குற்றச் செயலாகாது என கார்மே பொர்காடெல் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.