குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய ஆபிரிக்க குடியரசில் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி;ச் சூட்டில் அமைதி காக்கும் படைவீரர் காயமடைந்த போதிலும், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படைவீரர்களை காயப்படுத்துவது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் யுத்தக் குற்றச் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான தேர்தல் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் கிளர்ச்சியாளர்களுடன் முரண்பாட்டை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு சந்தேக நபர்களை விடுதலை செய்தனர் என இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.