130
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றில் அங்கம் வகித்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்றில் அங்கம் வகித்தால் அவர்களின் உறுப்புரிமை மட்டும் ரத்து செய்வது போதுமானதல்ல எனவும் அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்களில் கூறப்படுவதனைப் போன்று தமக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் உச்ச நீதிமன்றம் இது தொடர்பில் சரியான ஓர் தீர்ப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love