267
கடந்த சில நாட்களாக பருவ மழைகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலவரத்தை இன்று ஆராய்ந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலிய மாவட்டங்களில் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளம், முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி தலைமையில் அரச உயர் அதிகாரிகள் மட்டத்திலான மழை பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சனைக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு, காணப்பட்ட வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர் மழை பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளதாகவும், மத்திய அரசின் நிதி உதவி விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும், மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Spread the love