175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பியரின் விலை குறைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பியர் விலையை குறைப்பதன் மூலம் சட்டவிரோத மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாது என அiமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பியரின் விலையை குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் குறைவடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பியர் விலை குறைவானது சிறுவர்கள் மற்றும் பெண்களை பியர் அருந்த ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலத்திரனியல் பஸ்களை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த எத்தனிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love