Home இந்தியாஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது:-

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது:-

by editortamil

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற  கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள காவற்துறை தெரிவித்துள்ளது. இவர்கள்  5 பேரும் துருக்கி வழியாக செல்ல முயன்றபோது அந்த நாட்டு காவற்துறை கைது செய்து  இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.

இந்தநிலையில் குறித்த   5 பேரும் கண்ணூருக்கு சென்ற வேளை அவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்ததாக  காவற்துறை தெரிவித்துள்ளது.   அவர்களில் 2 பேர் ஏற்கனவே பலமுறை சிரியா சென்றதும் அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர்களது பெயர் விவரங்களை    வெளியிடவில்லை.

இவர்களை போல மேலும் பலர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் தகவல் மத்திய புலனாய்வு காவற்துறையினருக்கு  கிடைத்துள்தாகவும், அவர்களையும் கைது செய்ய  தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More