குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் இன்று புதன்கிழமை கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குதல் வேண்டும் ” என போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலை கோரி தொடர்ச்சியாக 143 நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளுக்கு ” பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இவ் வருடத்திற்குள் நியமிப்பதாக ” உறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான நியமனங்களை வழங்குவதற்கான செயற்பாடும் நடைபெறவில்லை இதனால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் போது முதலமைச்சர், ஆளுனர், கௌரவ அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமரிற்கு பட்டதாரிகளின் கையெழுத்துக்கள் உள்ளடங்கியவகையில் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
பட்டதாரிகள் வேலை கோரி போராட்டம் (13.11.17)
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் எதிர்வரும் புதன்கிழமை கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ‘ அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குதல் வேண்டும் ‘ என போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வேலை கோரி தொடர்ச்சியாக 143 நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளுக்கு ‘ பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இவ் வருடத்திற்குள் நியமிப்பதாக ‘ உறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான நியமனங்களை வழங்குவதற்கான செயற்பாடும் நடைபெறவில்லை இதனால் இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப் போராட்டத்தின் போது முதலமைச்சர், ஆளுனர், அரசாங்க அதிபர் ஆகியோரூடாக பிரதமரிற்கு பட்டதாரிகளின் கையெழுத்துக்கள் உள்ளடங்கியவகையில் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளது வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.