161
குளோபல் தமிழ் செய்தியாளர்
அரசாங்க மருத்துவ பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களுக்கு செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்வுத் திட்டத்தினைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.
Spread the love