குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரின் ராகின் மாநிலத்தில் வன்முறைகளை நிறுத்துமாறு அந்நாட்டு இராணுவத் தளபதியிடம், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் அமெரிக்க பாதுகாப்பச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், மியன்மாரின் இராணுவத் தளபதியை சந்திக்க உள்ளார்.
ராகீன் மாநிலத்தில்; வன்முறைகளை நிறுத்தி, ரோஹினிய முஸ்லிம்கள் மீளவும் சொந்த இடங்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகீன் மாநிலத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகள் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் சுமார் 600,000 ரோஹினிய முஸ்லிம்கள் பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
மாநிலத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.