185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் போல் ஸ்குலி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். இலங்கையில் சர்வதேச ஊடகமொன்று இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love