கந்துவட்டி கொடுமையை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தன்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது எனவும் தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் பாலா கோரியிருந்த மனுவினை விசாரித்த நீதிபதி மேற்படி தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஒக்டோரபர் 23 அம் திகதி, கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து இறந்ததை கண்டித்து, பாலா 24 ஆம் திகதி கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து, தனது முகநூலில் வெளியிட்டிருந்தார்
குறித்த சித்திரம் நெல்லை மாவட்ட காவல்துறைஅதிகாரி, முதலமைச்சர் ஆகியோரை விமர்சிப்பதாக இருந்ததனைத் தொடர்ந்து தொடர்ந்து காவல்துறை; அதிகாரி தொடுத்த வழக்கு தொடர்பில் பாலா கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டாhர் என்பது குறிப்பிடத்தக்கது.