164
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தியான ஐயப்பன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூசை தரிசனத்தை முன்னிட்டு கோயில் நடை இன்று திறந்து வைக்கப்பட்டது.
மண்டல பூசை தரிசனம் மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக இந்த ஆலயத்திற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றமை வழங்ககமாகும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் நாளில் இருந்து 41 நாட்கள் மண்டல பூசை மற்றும் தரிசனம் நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.
இதன் பிரகாரம் தமிழ் மாதப்படி நவம்பர் 17ஆம் திகதி அதாவது கார்த்திகை 1ஆம் திகதியும் மலையாள மாதப்படி ஒரு நாள் முன்னதாக கார்த்திகை மாதம் நாளை ஆரம்பிக்கின்றது. இதனை முன்னிட்டு இவ் வருடத்திற்கான மண்டல பூசைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் வழிபாடுகளுடன் இன்றைய பூசைகள் ஆரம்பமாகின. இதேவேளை நாளை முதல் நாள் தோறும் மண்டல பூசையின் வழக்கமான வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.இவ் வழிபாட்டிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தரவுள்ளமையால் அவர்களின் தேவைகளை கேரள மாநில அரசு மேற்கொண்டுள்ளதுடன் சபரிமலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love