குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 10 பேரையும் நவம்பர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது
தமிழகம் நாகைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்
அவர்களின் இரண்டு இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்திய மீனவர்கள் 10 பேரும் யாழ். கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.