ஜிம்பாப்வேவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முகாபே மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தலைநகர் ஹராரேவில் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிம்பாப்வேவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்து, இப்போது வீட்டுச் சிறையில் இருக்கும் முகாபேவின் எதிர்காலம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முகாபே தனது பதவி விலக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தென்னாபிரிக்க வளர்ச்சி குழு மற்றும் ஆபிரிக்க ஒன்றியம், ராணுவ ஆட்சியை ஆதரிப்பதைவிட, அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ரொபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளமையானது ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் அல்பா கோன்ட் நாட்டில் அரசியலமைப்பு நிலை உடனடியாக திரும்ப கோரிக்கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.