குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிலக்கரி பயன்பாட்டை தடுப்பதற்கு சுமார் 15 நாடுகள் அணி திரண்டுள்ளன. எதிர்வரும் 2030ம் ஆண்டில் நிலக்கரி பயன்பாட்டை முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்காக குறித்த பதினைந்து நாடுகளும்; சர்வதேச ரீதியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
பிரித்தானியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்த்துகல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, எதியோப்பியா, மெக்ஸிக்கோ மற்றும் மார்சல் தீவுகள் ஆகியனவே இவ்வாறு நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்க அணி திரண்டுள்ளன.
சக்தி வளத் தேவைக்கு நிலக்கரி வகைகளை பயன்படுத்துவதனை தடுக்கும் வகையில் இந்த நாடுகள் இணைந்து கொண்டுள்ளன. எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் காலநிலை குறித்த மாநாடு ஆரம்பமாக முன்னதாக இந்த நாடுகளின் எண்ணிக்கையை 15 லிருந்து 50 ஆக உயர்த்துவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.