195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதனிலை செல்வந்தருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வைத்து சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, பில்கேட்ஸை சந்தித்துள்ளார்.
சர்வதேச சுகாதார மாநாட்டில் பங்கேற்றிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுகாதாரத்தறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இந்த முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love