குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் தெரிவுகள் தொடர்பில் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷேன் வோர்ன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஸஸ் டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பாக உள்ள நிலையில் அணி தொடர்பிலான தெரிவுகளில் திருப்தி கொள்ள முடியாது என வோர்ன் தெரிவித்துள்ளார்.
மாநில அணிக்காக கூட விக்கட் காப்பாளராக கடமையாற்றாத ஒருவரை அணியின் விக்கட்காப்பாளராக தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்தியூ வடேக்கு பதிலீடாக ரிம்; பெய்னை அவுஸ்திரேலிய தெரிவுக்குழு அணியில் இணைத்துக் கொண்டுள்ளது. எனினும் இந்த தெரிவு குறித்து திருப்தி அடைய முடியாது என வோர்ன் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியை விடவும் இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது எனவும் ஷேன் வோர்ன் குறிப்பிட்டுள்ளார்.