Home உலகம்இந்திய அழகி மனுஷி சில்லார் 67-வது உலக அழகி போட்டியில் தேர்வு:-

இந்திய அழகி மனுஷி சில்லார் 67-வது உலக அழகி போட்டியில் தேர்வு:-

by editortamil

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார்(20) இந்த ஆண்டுக்கான இந்திய அழகியாகவும் தேர்வானார். தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More