குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் மத்திய மலைநாட்டுக்கு நேரில் வந்து செய்து நிலைமைகளை பார்வையிடாது கருத்து வெளியிடுவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மாநில அரசியல்வாதிகள் எப்பொழுதம் ஈழத் தமிழர்கள் பற்றி மட்டுமே பேசி வருவதாகவும் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்;ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றியும் அவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் பற்றியும் கரிசனை கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பெயர் மாற்றம் தொடர்பிலான பிரச்சினைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு கிடையாது எனவும், கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெயர் மாற்றம் தொடர்பிலான பிரச்சினை இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மலையக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தி விடக் கூடாத என தெரிவித்துள்ள அவர் நிலைமைகளை நேரில் வந்து குறிப்பிட்டுள்ளார். 40000 மலையக பெருந்தோட்ட தொழிலாளிக் குடும்பங்களுக்கு இன்னமும் கழிப்பறை வசதி கிடையாது என்பதனையும் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.