157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எவரும் அச்சமடையத் தேவையில்லை என அறிவித்துள்ளது. களஞ்சியசாலையில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலைகளில் 24479 தொன் எடையுடைய 90 ஒக்டேன் ரக பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தடையின்றி எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love