குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உறுப்புரிமை; கோரியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயின் முற்போக்குக் கட்சியின் முன்னாள் தலைவர் கார்ல் ஐ ஹேகன் ( Carl I Hagen) னே இவ்வாறு உறுப்புரிமை கோரியுள்ளார். நோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் கார்ல் ஐ ஹேகன் அங்கம் வகித்தால், விருது வழங்கும் செயன்முறையின் நம்பகத்தன்மையை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோபள் சமாதான விருது வழங்கும் ஐந்து பேரைக் கொண்ட குழுவின் மூன்று உறுப்பினர்கள் நோர்வே பாராளுமன்றின் ஊடாக தெரிவு செய்யப்படுகின்றனர். பாராளுமன்றினை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளே உறுப்பினர்களை பரிந்துரை செய்கின்றன.
இந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராகவும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டு வந்த, கடும் போக்குடைய கார்ல் ஐ ஹேகன் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பெரும்பாலும் இவருக்கு குழுவில் அங்கத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அங்கத்துவம் வழங்கப்பட்டால் சமாதான விருது பக்கச்சார்பற்ற வகையில் வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.