Home இலங்கைபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கோப் குழுவின் உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்கள் அம்பலமாகியமை தொடர்பிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.

சில ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜனநாயக நாடொன்றில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு இவ்வாறு பகிரங்கப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறப்புரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டு குறித்து கவனம் செலுத்தப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More