பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில்; இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து அங்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்ததாகவும் டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இதே பகுதியில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது