குளோபல் தமிழ்ச செய்தியாளர்
யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிக்காத நிலையில் நான்கு எறிகணைகள் காணப்படுகின்றன.
குறித்த எறிகணைகள் தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்த போதிலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு கால தாமதமாகி வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அது குறித்து மேலும் தெரிய வருவதாது , வன்னியிலிருந்து எடுத்துவரப்பட்ட கிரவல் மண் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு முன்பாக பறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிரவல் மண்ணுடன் 4 எறிகணைகளும் புதைந்துகிடந்து வந்துள்ளன.
அவை தொடர்பில் கிராம அலுவலகருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் இன்று மாலை 3 மணியளவில் கோப்பாய் காவல்துறையினருக்கும் 119 என்ற காவல்துறை அவசர சேவைக்கும் அறிவிக்கப்பட்டது.
சுமார் 4 மணித்தியாலங்கள் கடந்தும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை. எனவும் போது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.