குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் நடைபெற்ற மீள் தேர்தல் சட்ட ரீதியானது என கென்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, தேர்தலில் வெற்றியீட்டிய தற்போதைய ஜனாதிபதி உகுரு கென்யாட்டா (Uhuru Kenyatta ) மீளவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட மீள் தேர்தலை கென்யாவின் பிரதான எதிர்க்கட்சிகள் பகிஸ்கரித்திருந்ததுடன் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தன. எனினும், இந்த இரண்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதேவேளை, புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அழுத்தம் காரணமாக நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.