நல்லாட்சி அரசாங்கத்திலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகத்துறை தொடர்ச்சியான அழுத்தங்கள் கண்காணிப்புக்கு உள்ளாகி வருவதாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2004ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் நடேசன் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழ் ஊடகத்துறை கிழக்கு மாணத்தில் பாரிய சாவல்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பு -07 லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. அங்கு குழு நிலை கலந்துரையாடலில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் டீபிகா உடகம, ஊடக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணான்டோ ஆகியோர் குழு நிலை கலந்துரையாட்லில் உரையாற்றினர். நிகழ்வின் ஆரம்பத்தில் கலாநிதி சுனில் சிறிவர்த்தன சிறப்புரையாற்றினார்.
தமிழ் ஊடகங்களின் தற்போதைய நிலை மற்றும் சமகால அரசியல் பார்வை தலைப்பில் உரையாற்றிய நிக்ஸன், நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற 2015ஆம் ஆண்டில் இருந்து, காலியில் கடந்த வாரம் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரையான சம்பங்களை சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றபோது குறைந்தளவேனும் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று வரை தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல் பற்;றி எந்தவொரு விசாரணையும் உரிய முறையில் இடம்பெறவில்லை.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தபட்டபோது சுதந்திர ஊடக இயகத்துடன் சேர்ந்து மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், ஊடகவியலாளர்;கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும் என அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. தமிழ் ஊடகங்;கள் இனவாதமாக எழுதுவதாக சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சிங்கள ஊடகங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளிவருதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளையே தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றன. அது இனவாதம் அல்ல. ஆனால் அனேகமான சிங்கள ஊடகங்;கள் இனவாதத்தை வெளிப்படுத்துகின்றன. சரியான புரிந்துணர்வுகள் இன்னமும் ஏற்பட்வில்லை.
இவ்வாறான அவல நிலை ஒன்றின் பின்னணியில்தான் நாங்கள் இன நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். அவ்வாறான நம்பிக்கையற்ற தன்மையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஊடகங்;;;கள் சரியான முறையில் செயற்பட்டால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
ஆனால் அவ்வாறான மன நிலையில் சிங்கள ஊடகங்கள் இல்லை. மாறாக தமிழ் ஊடகங்களை மாத்திரமே இனவாதம் என்று குற்றம் சுமத்துகின்றனர். கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் இன்னமும் சரியான உரிமையோடு பணியாற்ற முடியவில்லை. நடேசன் கொல்லப்பட்டதில் இருந்து இன்று வரை முஸ்லிம் ஊடகவியலாளர்கள்தான் கிழக்கில் பணியாற்றுகின்றனர். தமிழர்கள் ஊடகவியலாளர்களாக பணியாற்ற முடியாத அளவுக்கு கிழக்கில் தொடர்ச்சியான அழுத்தங்கள், கண்காணிப்புகள் உள்ளன. வடமாகணாத்தின் ஊடக நிலைமை தொடர்பக பேசுமாறுதான் என்னிடமும் கேட்கப்பட்டது.
ஆகவே கிழக்கு மாகாணத்தை ஊடக இயக்கங்களும் கைவிட்டுள்ளன. அல்லது கிழக்கு மாகாண நிலைமை மூடி மறைக்கப்படுகின்றது என்று கூறலாம். வடமாகாணத்தில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் இன்று வரை கிழக்கு மாகாணத்திலும் உள்ளன. ஆனால் கிழக்கு நிலைமை தொடர்பாக பேசப்படுவதில்லை. (தமிழர் அரசியலாக இருக்கலாம் ஊடகத்துறையாகவும் இருக்கலாம்)
எனவே இவ்வாறான மூடி மறைப்புகளுடன் ஊடக சுதந்திரம், ஊடக ஜனநாயகம் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று குறைகூறிய நிக்ஸன் ஒருமித்த மனதுடன் எல்லோரும் ஒன்று சேர்ந்;;தால் மாத்திரமே உண்மையான நல்லிணக்;கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.