நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தை இலங்கையர்கள் இன்று வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நேரப்படி இன்று மாலை 6.25 மணியளவில் இதனை இலங்கையர்கள் விண்ணில் அவதானிக்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்சம் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே இதனைப் பார்க்க முடியும் எனவும் விமானம் அல்லது மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்று நகருவது போன்று இந்த சர்வதேச விண்வெளி மையத்தினை அவதானிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையம் மணித்தியாலத்துக்கு 28,000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் எனவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.