குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா (emmerson-mnangagwa ) இன்றையதினம் பதவியேற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா வை பணி நீக்கியதனைத் தொடர்ந்து அவர் தென் ஆபிரிக்காவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் மிக நீண்ட காலமாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக கடமையாற்றி வந்த முகாபே பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில், ஹராரே நகரின் புறநகர் பகுதியில் உள்ள தேசிய விளையாட்டு திடலில் சிம்பாப்Nயின்; புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் நாங்காவா இன்று பதவி ஏற்றார். அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட முகாபே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் நாங்காவா நியமிக்கப்படக்கூடிய சாத்தியம்
Nov 23, 2017 @ 03:16
சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா ( emmerson-mnangagwa- ) நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா வை பணி நீக்கியதனைத் தொடர்ந்து அவர் தென் ஆபிரிக்காவிற்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்தநிலையில் மிக நீண்ட காலமாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக கடமையாற்றி வந்த முகாபே நேற்று பதவி விலகியிருந்தார். முகாபேயின் பதவிவிலகலுக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீதியில் இறங்கி தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். அதிகாரத்தை சுமூகமான முறையில் பகிரும் நோக்கில் பதவியை விலகுவதாக முகாபே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது