ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வேண்டுகோளைத் தொடர்ந்து ஏமன் எல்லையைத் திறக்க ஏமன் – சவூதிப் படைகள் முடிவு செய்துள்ளன. ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், மக்களுக்கு மனித உரிமை அமைப்புகளின் உதவிப் பொருட்கள் வந்து சேர்வதை அனுமதிக்கும் வகயில் இந்த எல்லையை திறக்கவுள்ளதாக ஏமன் – சவூதி கூட்டுப் படைகள் தரப்புகள் இன்றையதினம் தெரிவித்துள்ளன.
ஏமனில் கடந்த 20105ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் இடம் பெற்றுவருகின்ற நிலையில் அரச படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதாகத் தெரிவித்து ஏமன் அரசு கூட்டுப் படைகள் கடந்த திங்கட்கிழமை ஏமன் எல்லையை மூட உத்தரவிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து எல்லைப் புறத்தில் வசிக்கும் மக்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது